இந்திய எல்லையில் பறந்த பாகிஸ்தானின் டிரோன்..!
இந்திய எல்லையில் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் டிரோன் ஒன்று கண்காணிப்பு பணியில் மேற்கொண்டிருந்தது.
இதனை கண்ட இந்திய ராணுவ வீரர்கள் அதை உடனடியாக சுட்டு வீழ்த்தினர். அந்த டிரோனை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைத்தனர் என்பதும் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ட்ரோன் என்பதும் தெரியவந்தது என இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.







