--- --:--:-- --

தமிழ் வழியில் படித்தவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது குறைவு..!

1.1

மிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மிக மோசமான அளவுக்கு சரிந்து இருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

 

தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்ற தகவல்களை நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

 

அதற்கு 2015ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலான தகவல்களை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் வழங்கியுள்ளது. அந்த தகவலின் படி 2015 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்த 510 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

 

2016 ஆம் ஆண்டில் தமிழ் வழியில் கல்வி பயின்று 537 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். மருத்துவ படிப்பிற்கான தகுதி தேர்வான நீட் கொண்டுவரப்பட்ட பிறகு 2017ஆம் ஆண்டில் தமிழ் வழியில் கல்வி பயின்ற 52 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 106 ஆக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon