--- --:--:-- --

கழுத்தளவு வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கைக்குழந்தையை பத்திரமாக மீட்ட நபர்..!

3

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கழுத்தளவு தண்ணீரில் இருந்து கைக்குழந்தையை இளைஞர் ஒருவர் பத்திரமாக மீட்டு கொண்டு சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு மாநகரில் பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

 

இந்நிலையில் வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ள பகுதியில் பிறந்து 15 நாட்களான கைக்குழந்தையை கழுத்தளவு நீரில் இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக கொண்டு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் தேங்கிய தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன.

 

இதனுடைய பெங்களூருவில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon