--- --:--:-- --

பஹல்காம் தாக்குதல் – பிரிக்ஸ் தலைவர்கள் கண்டனம்

4

பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தில், பிரிக்ஸ் தலைவர்கள் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும் “பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய இயக்கம், பயங்கரவாத நிதியுதவி மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் உட்பட அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட” அழைப்பு விடுத்துள்ளனர்.

 

இந்தப் பிரகடனத்தில் எந்தப் பெயர்களும் இல்லை என்றாலும், எல்லை தாண்டிய பயங்கரவாதக் குறிப்பு பாகிஸ்தானை இலக்காகக் கொண்டதாகக் கருதப்படுகிறது. அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் “இந்தியாவின் ஆன்மா, அடையாளம் மற்றும் கண்ணியத்தின் மீதான நேரடித் தாக்குதல்” என்று கூறினார்

 

“தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயத்திற்காக” “பயங்கரவாதத்திற்கு மௌனமாக ஒப்புதல் அளிப்பது, பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதிகளை ஆதரிப்பது” எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்றும், “பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது” என்றும் கூறினார்.

Right Menu Icon