ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது எப்படி? – வழிகாட்டுதல்களை வெளியிட்ட தமிழக சுகாதாரத் துறை
ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்களை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. “ரேபிஸ் தடுப்பூசிகளை உரிய வழிகாட்டுதல்களின்படி சேமித்து வைக்க வேண்டும்.
தடுப்பூசிகளை சேமிக்கும்போதும், செலுத்தும்போதும் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். காயத்தின் ஆழத்தை பொறுத்து 3 வகைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும்” என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.






