மரங்களின் நாயகன் பத்மஸ்ரீ ராமைய்யா காலமானார்!
இயற்கையின் மீது தீராத காதல். தனது பெயரையே வனஜீவி என மாற்றியவர். 1 கோடி மரங்களை நட்டு மனித இனத்திற்கு உதவியவர். மத்திய அரசால், பத்மஸ்ரீ விருது பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ராமைய்யா (85) காலமானார்.
தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு மக்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரின் வாழ்க்கையை கௌரவிக்கும் விதமாக, நீங்களும் முடிந்தால் இன்று ஒரு மரம் நடுங்கள்!






