--- --:--:-- --

விமானம் புறப்பட தயாரான கடைசி நிமிடத்தில் பயணி ஒருவருக்கு கொரொனா..!

4

லைநகர் டெல்லியில் விமானம் புறப்பட தயாரான கடைசி நிமிடத்தில் பயணி ஒருவருக்கு கொரொனா உறுதியான சம்பவம் நடைபெற்றுள்ளது. டில்லியிலிருந்து புனேவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ் 63 நியூ ரக விமானம் வியாழக்கிழமை அன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு விமான ஓடுபாதையில் வந்தது.

 

அப்போது விமான பயணி ஒருவர் தனக்கு உறுதியாக இருப்பதாக வந்த தகவலை காண்பித்துள்ளார். இதனை அறிந்த விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து மீண்டும் விமானம் நின்ற பகுதிக்கு விமானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

 

இதுகுறித்து பயணி மற்றும் பிற பயணிகளும் கீழே இறக்கப்பட்டனர். விமானம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் தாமதமாக அந்த விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon