முதலில் உங்கள் பையன்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் எனக்கூறிய ஓவியா..!
பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்குவதற்கு மாறாக பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டுமென ஆண்களுக்கு பெற்றோர் சொல்லி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தியபட்டினம் பகுதியில் தனியார் கல்லூரியில் ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகை ஓவியா மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடி தனது பிறந்தநாளை மாணவர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்குவதற்கு மாறாக பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என ஆண்களுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.





