இளம்பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சி..!
மதுரை தெப்பக்குளம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் இருந்து தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருச்சி குமரன் நகரை சேர்ந்த வெங்கடேஸ்வரி என்பவர் மதுரை தெப்பக்குளம் அருகே காமராஜர் சாலையில் தனது தம்பியுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் எதார்த்தமாக நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென 7 சவரன் தங்க செயினை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.





