ஆப்பிரிக்கா பெண்ணை தமிழ் முறைப்படி மணம் முடித்த இளைஞர்..!
கோவையில் காதலர்களாக வலம் வந்த ஆப்பிரிக்கா பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த வாலிபரும் தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் சேர்ந்தவர் முத்துமாரியப்பன்.
இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து விட்டு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பகுதியில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இவருக்கு அங்குள்ள ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் தங்களது காதல் விவகாரத்தை இருவரது வீட்டிலும் தெரிவித்து சம்மதம் பெற்றனர்.
பின்னர் கோவை வந்த இருவருக்கும் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற மணப்பெண்ணின் உறவினர்கள் தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி சேலை அணிந்து பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.





