--- --:--:-- --

வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

1

த்திய பட்ஜெட்டில் தங்கம் விலை மீதான சுங்கவரியை 6 சதவீதம் குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

 

அதாவது நேற்று ஜூலை 26ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் இன்று ஜூலை 27ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.6465 க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.51,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5296க்கும், சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,368க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ89 க்கும் ஒரு கிலோ ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon