குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது விவகாரத்தில் 75 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு..!
தஞ்சையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது விவகாரத்தில் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவரின் அலட்சியத்தால் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
குழந்தையின் கட்டைவிரலை பழையபடி சேர்க்கும் வகையில் நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று வழக்கு குறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







