--- --:--:-- --

கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு..!

8

ர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.  அருள்மணி என்ற அவரது மனைவிக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 19 ஆம் நாள் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

 

அதற்கடுத்த நாள் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணாமல் தாய் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குழந்தையை தூக்கிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகியது தெரியவந்தது.

 

இந்த நிலையில் குழந்தையை கடத்தியதாக ஒரு பெண்ணையும் அவரது கணவரையும் கைது செய்தனர்.  மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon