எங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரொனா தொற்று இல்லை – வட கொரிய அதிபர்
தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரொனா தொற்று இல்லை என உலக சுகாதார அமைப்புடன் வட கொரியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார மையம் வடகொரியா அளித்திருக்கும் கோரிக்கையில் ஜூன் 10ஆம் தேதி வரை அறிகுறியுடன் இருந்த 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்களை சோதனை செய்ததாகவும் அதில் யாருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பு, சீனாவுடன் எல்லை பகிர்வு, எந்த ஒரு பொருளாதார தேவைக்கும் சீனாவை சார்ந்திருக்கும் வடகொரியாவில் கொரொனா தொற்று இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.







