--- --:--:-- --

10,11 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக தேர்வுத் துறை பிறப்பித்த உத்தரவு! மாணவர்கள் அதிர்ச்சி..!

5

பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சண்ட், அதாவது தேர்வுக்கு வருகை புரியவில்லை என பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். கொரொனாவின் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

 

விடுபட்டுப்போன பதினோராம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக மாணவர்களுக்கு காலாண்டு , அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் தீர்வு கண்டு முடிவை அறிவிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

 

இந்த நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வை முழுமையாக எழுத வில்லை என்றால் ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத் துறை கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon