--- --:--:-- --

சீனாவில் பரவிவரும் அடுத்த வைரஸ்..இந்தியாவிற்கு பரவ வாய்ப்பா?

6

கொரொனா வைரஸ் பாதிப்பே இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் சீனாவில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துமா? சீனாவின் வுகாண் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன.

 

இந்த நிலையில் சீனாவில் ஜி4எச்1 எனப்படும் புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பன்றிகளில் இருந்து பரவும் இந்த வைரஸ் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலின் வைரஸ் மரபணு மாதிரியை போல உள்ளது. இது போன்ற வைரஸ்கள் அவ்வப்போது ஏற்படுவது வாடிக்கைதான் என்கிறார் ஆராய்ச்சியாளர்.

 

சீனாவில் கண்டறியபட்டிருக்கும் புதிய வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. மனிதர்களுக்கு எந்த அளவிற்கு பரவும் என்பதை விரைவில் ஆராய வேண்டுமென தொற்று நோய் மருத்துவ ராம் கோபால் கிருஷ்ணன் வலியுறுத்துகிறார். புதிதாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் கொரோனா வைரஸ் போன்று பரவும் ஆபத்து உள்ளதாகவும் ஆரம்பத்திலேயே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவை சேர்ந்த ஐஏஎஸ் மருத்துவ இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்கும்பொழுது இந்த வைரஸ் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கான தடுப்பு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon