தேனியில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை ஈரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து மணம் திறந்து பேச உள்ளார். இந்நிலையில் மக்களை காப்போம்! தமிழகத்தை மீட்போம்! என்ற தலைப்பில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றிரவு வருகை தந்துள்ளார்.
இதனிடையே சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 10மணியளவில் போடிநாயக்கனூரில் உள்ள வ.உ.சி.யின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பெரியகுளம் தென்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இன்னும் சிறிது நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.





