--- --:--:-- --

புயல் பாதிப்பிற்கிடையே நடனமாடிய நடிகைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு..!

8

வ்தே புயல் மும்பையை புரட்டிப் போட்ட நிலையில் தொலைக்காட்சி நடிகை தீபிகா சிங் மழையில் நடனமாடிய வீடியோ பதிவிட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடும் சூறாவளி காற்றின் காரணமாக மும்பையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் காற்றின் காரணமாக சாலையில் விழுந்த மரங்களுக்கிடையே நடனமாடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகை தீபிகா சிங் பதிவிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

 

புயலின் காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்து இருக்கும் நிலையில் இதுபோல வீடியோ வெளியிடுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என தெரிவித்துள்ளனர். மேலும் முக கவசம் அணியாமல் சாலையில் நடனம் ஆடுவதாகவும் நடிகையை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon