கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை குறைவு
கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது விலை குறைந்து கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வட மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதையடுத்து வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்த வெங்காயம் கடந்த மாதம் வரை கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது விளைச்சல் அதிகரித்து வருவதால் வெங்காயம் மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ வெங்காயம் குறைந்தபட்சமாக 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் பீன்ஸ், பீட்ரூட் ,முள்ளங்கி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விலையும் குறைந்துள்ளது. வரும் காலங்களில் மேலும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



