--- --:--:-- --

2 கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு பலத்த காயம்..!

6

திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் 2 கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திருத்தணி அரக்கோணம் ஆகிய பகுதிகளிலிருந்து புறநகர் ரயில் பயணம் செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் ரயில் நிலையத்தில் 2 கல்லூரி மாணவர்களில் ரூட்டு தல யார் என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் பயங்கர மோதலாக மாறியுள்ளது. இதில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர் தினேஷ் தலையில் பலத்த அரிவாள் வெட்டு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon