ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: திமுக எம்பிக்கள் நோட்டீஸ்
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு எதிராகப் பேச அனுமதி கோரி எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணிக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் தாக்கல் செய்யவுள்ளார். ஆரம்பம் முதலே இம் மசோதாவை காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.






