வாணியம்பாடியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார். இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். நாராயணபுரம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அவரது சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த வேலாயுதத்தை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவரது செல்போனை பார்த்த போது அதில் 2 துளைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை உணர்ந்த அவர் செல்போனில் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கி குண்டுகளை வெளியே எடுத்துள்ளார். இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே தாடை பகுதியில் துப்பாக்கி கொண்டு உள்ளதா என்பதை அறிவதற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வேளாயுதம் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






