ராட்வீலர் நாய் கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ராட்வீலர் நாய் கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி பலியாகியுள்ளார். புது கூலமேடு கிராமத்தில் விஜயசுந்தரம் என்பவர் தனக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் 2 ராட்வீலர் நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
வேலை செய்து வந்த வல்லம்படுகை சேர்ந்த 54 வயதான ஜீவானந்தம் வழக்கம் போல் மதியம் நாய்களுக்கு உணவு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவிழ்த்து விடப்பட்டு இருந்த ஒரு ராட்வீலர் நாய் ஆக்ரோஷத்துடன் அவரை பாய்ந்து கடித்து குதறி உள்ளது.
முகம் கைகளில் பலத்த காயம் அடைந்த ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்று உடலை கைப்பற்றிய சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






