--- --:--:-- --

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர் !

27421676-0002-4f8f-b8cf-5b124394b5f6

இராமநாதபுரம் மாவட்டத்தில் கௌரவக் கொலைகள் தடுப்பு சிறப்பு பிரிவு (Anti Honour Killing Special Cell) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.கௌரவ கொலைகள் தடுப்பு சிறப்பு பிரிவை (Anti Honour Killing Special Cell) தொடர்பு கொள்ள 83000 31100 என்ற எண்ணில் 24 மணி நேரமும் உங்கள் உதவிக்கு அழைக்கலாம்.

 

கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சமுதாய ரீதியாக இழைக்கப்படும் துன்புறுத்தல் தொடர்பான புகார் மனுக்கள் 24 மணி நேரமும் பெறப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.ஜாதி மற்றும் மதரீதியான கலப்பு திருமணங்களை எதிர்ப்பதும் தடுப்பதும் சட்டப்படி குற்றமாகும்.21வயது முடிந்த ஆண் 18 வயது முடிந்த பெண் கலப்பு திருமணம் செய்வதை எதிர்ப்பது குற்றமாகும்.

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அவர்கள் குடும்பத்தில் இருந்து எதிர்ப்புகள் இருந்தால் காவல்துறை மூலம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கலப்புத் திருமணம் செய்து கொண்ட ஆண் மற்றும் பெண்ணின் குடும்பத்தினருக்கு கலந்தாய்வு (Counseling) செய்து சுமுகமாக சேர்த்து வாழ அறிவுரை வழங்கப்படும், என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon