கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்..!
2006 இல் மாநில அரசு பணிக்கு தேர்வான 13,000 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல் வெளியிட்டுள்ளார். அரசின் முடிவால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்தவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.





