--- --:--:-- --

மாணவர்கள் கல்வி கற்றால் தான் ஊருக்கு பெற்றோருக்கு நாட்டுக்கு பெருமை..!

2

மாணவர்கள் கல்வி கற்றால் தான் ஊருக்கு பெற்றோருக்கு நாட்டுக்கு பெருமை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக வேலூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்குள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட மாணவர் விடுதி மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார்.

 

பின்னர் வீரத்தின் விளைநிலமாக விளங்கும் வேலூரை கல்வி விளை நிலமாக விஸ்வநாதன் மாற்றி உள்ளார் எனவும் புகழ்ந்தார். பல்கலைக்கழக கட்டிடத்திற்கு கருணாநிதி பெயரை சூடியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார் ஸ்டாலின்.

 

அனைத்து துறைகளும் வளர்ச்சி என்ற பாதையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழகம் செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். அதன் விளைவாக தான் தமிழ்நாட்டை நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொடர்ந்த வந்து கொண்டிருக்கின்றனர் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 

தமிழகத்தின் தலைநகர் சென்னை என்றால் ஆராய்ச்சி நிலையம் தலைநகராக வேலூரில் எனவும் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Right Menu Icon