ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!
அதிமுக தலைமை அலுவலகம் சாவி தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்ட உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓ பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத பொழுது கட்சி அலுவலகத்தின் அதிகார உரிமையை கூறமுடியாது எனவும் தலைமை அலுவலகத்தின் சாவியை தன் வசம் ஒப்படைக்க கூறுவது எந்த ஒரு முகாந்திரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளார் என்றும் கையாடல் செய்த ஒருவருடன் அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





