--- --:--:-- --

திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத ஓட்டு என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்..!

11

திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத ஓட்டு என்றும் அதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

 

போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சகர் நகர் பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய ஓ பன்னீர்செல்வம் 2006ல் திமுக அரசு ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்தது.

 

ஆனால் 5 வருடம் ஆட்சி செய்தும் யாருக்கும் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். இப்பொழுதும் நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக அவர் விமர்சனம் செய்தார்.

Leave a Reply

Right Menu Icon