--- --:--:-- --

தாயின் இறுதி ஊர்வலத்துக்குகூட செல்லாமல் பணியில் ஈடுபட்ட செவிலியர்!

7

தாயின் இறுதி ஊர்வலத்திற்கு கூட செல்லாமல் மருத்துவ பணியில் செவிலியர் ஈடுபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ராமமூர்த்தி மீனா என்பவர் கொரொனா பாதித்தவர்களை கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்பதால் தனது தாயின் இறுதி ஊர்வலத்திற்கு செல்வதை தவிர்த்ததாக கூறியுள்ளார்.

 

இருப்பினும் மருத்துவமனையில் இருந்தவாறே இறுதி ஊர்வலத்தை அவர் காணொளி மூலம் கண்டுள்ளார். மும்பை தாராவியில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 5 பேரில் தமிழர்கள் 3 பேர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸ் தாக்கம் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் அதிகம் உள்ளது.

 

அங்கு தமிழர்கள் வசிக்கக்கூடிய தாராவியிலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. ஏற்கனவே 17 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 5 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான தாராவியில் கொரொனாவை கட்டுபடுத்த மக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளை முகாம்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon