கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டு செவிலியர் மரணம்..!
கிருஷ்ணகிரி அருகே கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டு செவிலியர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை அடுத்த கோவிந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தடுப்பூசி முகாமில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த மலர்கொடி என்பவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.
காய்ச்சல் அதிகம் இருந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அறிக்கை வந்த பிறகே அவர் மரணத்திற்கு காரணம் என்ன என்பது தெரியவரும்.






