ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை நடிகர் விஜய் செலுத்திவிட்டார்..!
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2012-ல் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனி நீதிபதி உத்தரவை நீக்கக்கோரி விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை செலுத்திவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.






