தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து உயிரிழப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து உயிர் இழந்தான். வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நல்ல பாம்பு ஒன்று வந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ஐந்து வயது மகன் கார்த்திக்ராஜா பாம்பை விரட்ட முயன்ற பொழுது சிறுவனை கடித்து விட்டது.
உடனடியாக சிறுவனை மீட்ட உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






