--- --:--:-- --

அதிமுக கூட்டணிக்கு “ஷாக்”! தேர்தல் நேரத்தில் வெளியேறும் முக்கிய கட்சி

ADMK 01

அதிமுக – பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேற என்.ஆர். காங்கிரஸ் முடிவு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, சின்ன மாநிலமாக இருந்தாலும், புதுச்சேரி அரசியல் எப்போதுமே காரம் நிறைந்ததாகவே உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ராஜினாமாவால், முதல்வராக இருந்த நாராயணசாமி அண்மையில் பதவியிழந்தார். தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ஆம் தேதிதான் புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தை போலவே, தி.மு.க -காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. எனினும், சமீபத்தில் முதல்வர் நாராயணசாமி பதவி இழந்ததற்கு திமுக தான் காரணம் என்ற அதிருப்தி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. எனவே, காங்கிரஸ் ., ஆட்சியாளர்களால், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக தி.மு.க குற்றம்சாட்டி வருகிறது.

எனவே, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும்; தனியாகவோ அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி ட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற குரல்கள் திமுகவில் ஒலிக்கத் தொடங்கின. புதுச்சேரி தி.மு.க.வினரின் கோரிகையை அடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையில், தி.மு.க.,வினர் சுறுசுறுப்பாக அடுத்த கட்ட நகர்வுகளை தொடங்கினர்.

 

அதன்படி, முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் திட்டத்துடன், திமுகவினர் பேச்சு நடத்தினர். இதனிடையே இந்த விவகாரம் ராகுல்காந்தியின் கவனத்திற்கு சென்றது. புதுச்சேரியிலும், காங்கிரஸ்- தி.மு.க., கூட்டணி தொடரும் என்று கூறி, பிரச்சனைக்கு தற்காலிமாக ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார்.

 

இதற்கிடையே, அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ், முதல்வர் வேட்பாளர், தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், எனவே, அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரங்கசாமியை தங்கள் பக்கம் இழுக்க, புதுச்சேரி தி.மு.க தயாராகி வருகிறது. புதுச்சேரி அதிமுக கூட்டணியில் இருந்து, பிரதான கட்சியான என்.ஆர். காங்கிரஸ் வெளியேற முடிவு செய்திருப்பது, அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதற்கிடையே, காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், அக்கட்சியில் இருந்து வெளியேறி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon