திருச்சியில் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!
கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் எம்எஸ்வி சாலை, பெரியகடை உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி கடை வீதி பகுதியில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் கொரொனா பரவலை கட்டு படுத்தும் வகையில் திருச்சி எம்எஸ்வி சாலை, பெரியகடை பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல சின்னக்கடை வீதி, கம்மாள தெரு பகுதிகளிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மளிகை, பால், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஜூலை 17ஆம் தேதி வரை இருக்கும் என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.







