வடகிழக்கு பருவமழை தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை..!
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மழைக்கால முன்னேற்பாடுகள் தொடர்பான தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் சாலை பணிகள், மழை நீர் வடிகால் பணிகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பருவமழை தொடங்கிய பின்னர் புதிதாக சாலை பணியோ, சாலை பகுதிக்கு வெளியே நடைபெறும் மெட்ரோ பணிகளையும் தொடரக்கூடாது என தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





