மத்திய பிரதேசம் மாநில தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்..!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனை ஒட்டி ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் காலத்தில் உள்ளது 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஒரே கட்டமாக நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
இதனையடுத்து 31ஆம் தேதி வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. சத்தீஸ்கரியில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று தொடங்குகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





