--- --:--:-- --

ஓசியில் பயணம் இல்லை.. போக்குவரத்து துறை அறிவிப்பு கடுப்பான காவலர்கள்..!

2

ரசு பேருந்தில் காவலர்களிடம் டிக்கெட் கேட்டதால் போக்குவரத்து துறை காவல் துறைக்கிடையே ஈகோ பிரச்சனை வெடித்துள்ள நிலையில் சென்னையில் நோ பார்க்கிங் என நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்து சென்ற காவலர் டிக்கெட் எடுக்க மறுத்ததால் நடத்துனரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில் அரசு பேருந்துகளில் செல்லும் காவலர்கள் வாரண்ட் இல்லாவிட்டால் டிக்கெட் எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இந்த சம்பவம் போக்குவரத்து துறைக்கும், போலீசாருக்கும் இடையே ஈகோ பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனால் சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

 

இந்நிலையில் போக்குவரத்து போலீசார் பழிவாங்கும் நோக்கில் போக்குவரத்து ஊழியர்களுக்கு அபராதம் விதித்துள்ளதாக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர்கள் கமலக்கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Right Menu Icon