வருகிற 28ஆம் தேதி முதல் முகக் கவசம் அணிய தேவையில்லை..!
இத்தாலி நாட்டு மக்கள் வருகின்ற 28ஆம் தேதி முதல் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கொரொனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முக கவசங்களை அணிவதிலிருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள ஆஸ்த்தா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







