--- --:--:-- --

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து இன்று ஆலோசனை..!

2

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து இன்று ஆலோசிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு குறித்த அறிவிப்புக்கு பிறகே தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

 

இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு குறித்து அமைச்சர்கள் அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்டபோது பிளஸ்டூ தேர்வு குறித்து இன்று ஆலோசிக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon