அமெரிக்காவுடன் இனி உறவு கிடையாது..!
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரியை, ட்ரம்ப் விதித்தது பல நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் செயல்களால் அதிருப்தியில் இருந்த கனடாவுக்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் பழைய உறவு இனி தொடராது எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.






