இலவச இணைய வசதி என்ற எந்தச் சுற்றறிக்கையும் வெளியிடவில்லை!
மே மூன்றாம் தேதி வரை இலவச இணையவசதி அளிக்கப்படுவதாக பரவிவரும் சுற்றறிக்கை பொய்யானது என பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது . ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து பணி புரிவோரின் வசதிக்காக மே 3ஆம் தேதி வரை இலவச இணைய வசதியை தொலை தொடர்புத்துறை வழங்குவதாக ஒரு சுற்றறிக்கை இணைய தளங்களில் பரவியது.
அது குறித்த விவரங்களை இணைப்பில் காணலாம் என ஒரு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறையிடம் பத்திரிகை தகவல் அலுவலகம் விசாரித்ததில் அது தவறான செய்தி என்றும் இலவச இணைய வசதி வழங்குவதாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.







