--- --:--:-- --

இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் 4 கோடிப் பேர் பாதிப்பு

11

இந்தியாவில் ஊரடங்கால் உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் 60 ஆயிரம் தொழிலாளர்கள் பெரு நகரங்களில் இருந்து ஊர்ப்புறங்களில் உள்ள சொந்த ஊர்களை நோக்கி இடம்பெயர்ந்த குறிப்பிட்டுள்ளது.

 

தெற்காசிய மண்டலத்தில் உள்நாட்டுகுள்ளும், நாடுகளிடையேயும் ஆட்கள் சென்று வருவது நெருக்கடியால் பாதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் பணியாற்றிய ஏராளமான தொழிலாளர்கள் விமான போக்குவரத்து நிறுத்தப்படும் வரை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய சொந்த நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தாகவும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon