--- --:--:-- --

கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐ‌ஏ‌எஸ் அதிகாரியை கைது செய்ய தடை..!

5

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை வரும் 23ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களுடன் கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கரன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் அவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதனிடையே முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது விசாரணையை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை சிவசங்கரனை அமலாக்கத் துறையினர் கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.

 

Leave a Reply

Right Menu Icon