போக்குவரத்து சாலை விதிகள் மீறுவோரை கண்டுபிடிக்கும் கேமரா..!
சேலத்தில் போக்குவரத்து சாலை விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக படமெடுக்கும் என்பிஆர் என அழைக்கப்படும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல் உள்ளிட்ட சாலை விதிமுறைகளை மீறுவோர் கண்காணிக்கப்படும்.
வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் அபராதத் தொகை அனுப்பும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் இந்த கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 2000 வாகனங்களைப் பதிவு செய்யும் அதிநவீன கேமரா விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கேமராவில் வாகனங்களை துல்லியமாக பதிவு செய்து போக்குவரத்து போலீசார் வெள்ளோட்டம் பார்த்தனர்.






