கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட காவலர்..!
புதுச்சேரியில் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்டு காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உதயஞ்ச்சாலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் பாண்டியன் என்பவர் கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மூதாட்டி ஒருவர் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றதைப் பார்த்து அவரை தண்ணீரிலிருந்து இழுத்து வந்து காப்பாற்றினார்.
மேலும் மயக்க நிலையில் இருந்த அந்த மூதாட்டியை கைகளில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்தார். விசாரணையில் மூதாட்டி தர்மபுரியை சேர்ந்தவர் என்பதும் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.






