நித்யானந்தா ஜாமீன் வழக்கு: ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு தொடர்பான சிபிசிஐடி காவல் துறையினரும், நித்தியானந்தா தரப்பும் பதில் கூற வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நித்தியானந்தாவின் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அது தொடர்பான விசாரணைக்கு நித்யானந்தா ஒத்துழைப்பு தருவதில்லை என்று குற்றம்சாட்டிய லெனின் கருப்பன் அவரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த நீதிபதி மைக்கேல் கர்நாடகா சிபிசிஐடி காவல்துறையினரும் நித்தியானந்தா தரப்பினரும் ஒரு வாரத்திற்குள் பதில் கூற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.






