நிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனு: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!!
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ்குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் 23 வயது மருத்துவ மாணவி நிர்பயா, கூட்டு பாலியல் கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த பாலியல் கொலைச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு கொலையாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் 18 வயது நிரம்பாத இளம் குற்றவாளி என்பதால் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு விடுவிக்டான்.
இந்தப் பாலியல் படுகொலை தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசரணை நடந்து வந்தது. இறுதியில் முகேஷ் குமார், வினய் சர்மா, அக்சய்குமார் சிங், பவன் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.வரும் 22-ந் தேதி காலை 7 மணிக்கு, டெல்லி திஹார் சிறையில் ‘ 4 பேரையும் தூக்கில் போட நாளும் குறிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுN வந்தது.
தூக்குத்தண்டனையில் இருந்து தப்பிக்க, கொலையாளிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்து, தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. இதனால் கொலையாளிகளுக்கு கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவரிடம் கருணை மனு வழங்கும் வாய்ப்பு மட்டுமே இருந்தது.
இதனால் கொலையாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் என்பவன் மட்டும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு செய்திருந்தான். இதனால் வரும் 22-ந் தேதி தூக்குத் தண்டனை நிறைவேறுமா?அல்லது தள்ளிப் போகுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் முகேஷ் குமாரின் கருணை மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அதனை இன்று நிராகரித்துள்ளார்.
இருந்தாலும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 3 கொலையாளிகளும் கருணை மனுச் செய்ய அவகாசம் உள்ளதால் வரும் 22-ந் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும், வேறொரு நாள் குறிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.






