கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவல்..!
கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்கள் பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ், விலங்குகள் வாயிலாக பரவும் தொற்று நோயாகும்.
குறிப்பாக பழ வகை வௌவால்கள், பன்றி போன்றவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





