ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா
ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாமென அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை (ஈரான், அமெரிக்கா) வைத்துள்ளவர்கள் ஈரானுக்குள் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுவதாகவும், அவர்களுடன் அமெரிக்க தூதரகம் மூலம் பேசுவதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





