--- --:--:-- --

டிக்-டாக்கில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

3.1

டிக் டாக்கில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி உள்ள மக்கள் பொழுதுபோக்கு செயலில் அதிகளவு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக்கில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனை குறைக்கும் விதமாக ஃபேமிலி பேரிங் என்ற புதிய வசதியை டிக்டாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 

பெற்றோர்கள் இந்த புதிய வசதி மூலம் தங்களது குழந்தைகள் டிக்டாக் செயலி அதிக நேரம் செலவிடுவதும் மற்றவர்கள் நேரடியாக தகவல் அனுப்பும் வசதியை கட்டுப்படுத்தவும் முடியும். கூடுதலாக 16 வயது உட்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நேரடி தகவல் அனுப்பும் வசதியை முடக்கியுள்ளது.

கொரொனா சங்கிலித் தொடர்பு போல ஒருவரிடமிருந்து ஒருவருக்கு எவ்வாறு பரவும் என்பது குறித்து வரிசையாக நிறுத்தப்பட்ட செங்கற்களை சரியவிட்டு சிறார்கள் விளக்கும் வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் இருக்கும் ஒவ்வொரு காட்சியில் சிறார்கள் செங்கற்களை சரிய விட்டு கொரொனா எவ்வாறு பரவும் என விளக்கியுள்ளனர்.

 

இன்னொரு காட்சியில் சரிந்துவிழும் செங்கற்கள் மத்தியில் ஒரு செங்கலை மட்டும் எடுத்து பரவலை தடுப்பது குறித்து விளக்கியுள்ளனர். அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் விளையாடிக்கொண்டே சிறார்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடத்தைச் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon